இடைநிலை ஆசிரியர்களுக்கு வாழ்வு கொடுக்குமா அரசு? கண்டுகொள்ளாத தி.மு.க!

இடைநிலை ஆசிரியர்களை கண்டு கொள்ளவில்லை தமிழக அரசு என்று ஆசிரியர்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

Update: 2023-01-01 13:56 GMT

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு மற்றும் புதிய ஆசிரியர்கள் நியமனம், தகுதி தேர்வு ரத்து செய்தல் என பல்வேறு அறிக்கைகளையும் தன்னுடைய தேர்தல் பணிகளில் கொடுத்தது தி.மு.க. ஆனால் எந்த ஒரு தேர்தல் வாக்குறுதிகளையும் தற்போது வரை நிறைவேற்றாமல் மௌனம் சாதிப்பதாகவும் ஆசிரியர்கள் குற்றச்சாட்டு முன்வைத்து இருக்கிறார்கள். பள்ளி கல்வித்துறையில் வேறொரு பணிகளிலும் இல்லாத அளவிற்கு ஊதியம் முரண்பாடு பிரச்சனையை தான் இடைநிலை ஆசிரியர்கள் சந்திக்கிறார்கள்.


கடந்த 2006 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் நியமிக்கப்பட்டார்கள். பணியாற்றியவர்களுக்கு காலம் முறை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. அடிப்படை ஊதியம் 4000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆறாவது ஊதிய குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தது. 2017 ஆம் ஆண்டு ஏழாவது ஊதிய குழுவில் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு 4,200 ரூபாய் தர வேண்டும் ஊதியம் இணை நிர்ணயித்தது.


ஆனால் மாநில அரசு வெறும் 2,800 தான் வழங்குகிறது. தொடர்ந்து இதனுடைய ஆசிரியர்களுக்கு நடக்கும் ஊதியம் முரண்பாடுகள் குறித்து தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் களம் இறங்கி இருக்கிறார்கள். தனது வாக்கு வங்கியை மாற்ற தி.மு க பல்வேறு அறிக்கைகளை தனது வாக்குறுதியாக வெளியிட்டது. ஆனால் ஆட்சி அமைந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News