போர்ச்சுகீசியர்களால் அழிக்கப்பட்ட இந்துக் கோயில்களை மீட்கும் பணி: கோவா முதல்வர் உறுதி!

கோவாவில் போர்ச்சுகீசியர்கள் அழிக்கப்பட்ட இந்துக் கோவில்களை மீட்கும் பணி துவங்க வேண்டும் என்று முதல்வர் உறுதி.

Update: 2021-12-23 01:00 GMT

கோவாவின் முதல்வர் பிரமோத் சாவந்த் தற்பொழுது கோவாவின் 60-வது விடுதலை தினத்தை முன்னிட்டு மக்களுக்கு குறிப்பாக இந்து மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் பல்வேறு தகவல்களை அளித்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது போர்ச்சுகீசியர் ஆட்சிக் காலத்தில் கோவாவில் தாக்குதலுக்கு உள்ளான அழிக்கப்பட்ட பல்வேறு இந்து கோவில்களை மீட்கும் பணியை நாம் அனைவரும் விரைவில் தொடங்க வேண்டும் என்பதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். மேலும் கோவாவில் சன்ஸ்கிரிட் மொழிகளில் அதிகமாக இந்து கோவில்கள் நாசமாக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 


குறிப்பாக போர்ச்சுகீசியர்கள் காலத்தில் கோவாவில் தலைசிறந்து விளங்கிய பல்வேறு இந்து கோவில்கள் அவர்களுடைய ஆட்சி காலத்தில் பல்வேறு தாக்குதலுக்குள்ளாகி அழிக்கப் பட்டுள்ளன. 1543- இல் படையெடுத்து வந்த போர்த்துகீசியர்களிடம் இந்து மன்னர்கள் தோல்வியடைந்த பிறகு போர்ச்சுக்கீசியர்கள் தங்களுடைய ஆதிக்கத்தை முழுமையாக கோவாவில் நிலைநாட்டி உள்ளார்கள். இதன்பிறகு 300க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள் அவர்களுடைய காலத்தில் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.   


வரலாற்றில் சிறப்புமிக்க பல்வேறு கோவில்கள் கோவாவின் சுற்றுலாத் தலங்களில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. எனவே அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க இந்துக் கோயில்களை காக்க வேண்டிய மிகப்பெரிய கட்டாயத்தில் நாம் இருப்பதாகவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். எனவே மக்கள் கோவாவில் பல்வேறு சுற்றுலாத் தலங்களையும் குறிப்பாக ஆன்மிகம் சம்பந்தப்பட்ட சுற்றுலா தலங்களையும் கொண்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில், கோயில்கள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.  

Input & Image courtesy: Times of India

Tags:    

Similar News