இளைஞர்கள் சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதன் அவசியம் ஏன்?
Importance of road safety and traffic rules.
இறைவனால் படைக்கப்பட்ட படைப்புகளில் மிகவும் அற்புதமான படைப்பு மனிதப் படைப்பு என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய மனிதர்கள் தங்களுடைய உயிர்களை ஏன்? விபத்துக்கள் மூலம் இழக்கிறார்கள் என்பது தெரிய படாத ஒன்றாகவே இருக்கிறது. உலக அளவில் ஏற்படும் உயிரிழப்புகளின் பெரும்பாலானவை சாலை விபத்துகள் காரணமாக நிகழ்கிறது என்று சர்வே முடிவு கூறுகிறது. ஆம், உண்மைதான் குறிப்பாக இந்தியாவிலும் இதே நிலைமை உள்ளது என்றும் கூறலாம். சாலை விபத்துகள் மூலம் அதிகமாக உயிர் சேதங்கள் மட்டுமின்றி, உடல் உறுப்பு பாகங்கள் இழப்பதற்கும் முக்கியக் காரணமாக இருக்கிறது. இந்த சாலை விபத்துக்கள் மூலம் குறிப்பாக உயிர் இழப்பவர்கள் இளைஞர்கள் தான் அதிகமாக உள்ளார்கள் என்பதும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்.
உலகளவில் இளைஞர்களை அதிகமாக கொண்ட நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ஆனால் நம் நாட்டில் உள்ள இளைஞர்கள் தங்களுடைய உயிர்களை இப்படிப்பட்ட சாலை விபத்துக்களில் மூலம் இழப்பது எவ்வளவு பெரிய துரதிஷ்டவசமான நிலை என்பது மிகவும் கவலை அளிக்கிறது. அரசாங்கம் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சகம் போன்ற அனைவருமே சாலை போக்குவரத்து விதிகளை மக்கள் கடைபிடிப்பதன் மூலமே இத்தகைய விபத்துக்களை தடுக்க முடியும் என்று பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்கள். மேலும் இந்த தகவல்களை இளைஞர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அனைவருக்கும் சாலை போக்குவரத்து விதிகளை அவர்கள் பயிற்றுவிக்கிறார்.
குறிப்பாக 18 வயது பூர்த்தி அடைந்த பிறகு சரியான முறையில் லைசன்ஸ் பெற்று பிறகு, இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பொழுது ஹெல்மெட் அணிவது, நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும்போது சீட் பெல்ட் போடுவது போன்ற அனைத்து விதிகளையும் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து விதிகளையும் தெரிந்து கொண்ட பிறகு ஏன்? இளைஞர்கள் விதிகளை மீறி வாகனங்களை இயக்குகிறார்கள் என்பது தெரியவில்லை. சில மாதங்களுக்கு முன் குழந்தைகளுடன் பயணிக்கும் பொழுது வாகனத்தின் அளவை 40 கிலோமீட்டர் வரம்பாக அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. சாலையில் பயணம் செய்வோர் அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில் சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.