இந்தியாவில் இம்ரான் கானை பொம்மையாக கருதுகின்றனர்: நவாஷ் ஷெரீப் கடும் விமர்சனம்!

இம்ரான் கானை கடந்த 2018ம் ஆண்டு ராணுவத்தால் ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கப்பட்டதால் அவரை இந்தியாவில் பொம்மையாக கருதுகின்றனர் என்று, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2021-12-25 06:26 GMT

இம்ரான் கானை கடந்த 2018ம் ஆண்டு ராணுவத்தால் ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கப்பட்டதால் அவரை இந்தியாவில் பொம்மையாக கருதுகின்றனர் என்று, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானில் பிரதமராக பதவி வகித்தபோது பல ஊழல்களை செய்துள்ளார் என்று நவாஷ் ஷெரீப் மீது அந்நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் அவர் சிறையில் சில காலம் இருந்தார். அதன் பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக 4 வாரங்கள் மட்டும் வெளிநாடு செல்வதற்கு லாகூர் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து அவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில், கடந்த வாரம் (வியாழக்கிழமை) லாகூரில் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது: இந்தியாவில் இம்ரான் கானை 'பொம்மை'யாகவே கருதுகின்றனர். மேலும், அமெரிக்காவில் மேயருக்கு உள்ள அதிகாரத்தைவிட குறைந்த அளவு அதிகாரமே இம்ரானிடம் உள்ளது. இதற்கு காரணம் அவர் ராணுவத்தால் பாகிஸ்தானில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். இதனை உலக நாடுகள் அறிந்ததே. மக்களின் வாக்குகளால் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ராணுவத்தால் வந்தவர் என கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். 

Source: Puthiyathalaimurai

Image Courtesy: New York Times

Tags:    

Similar News