பிரதமர் பதவி பறிபோன விரக்தியில் எம்.பி., பதவியை ராஜினாமா செய்த இம்ரான்கான்!

Update: 2022-04-11 14:16 GMT

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் இம்ரான்கானின் பதவி பறிபோனது. இதனால் விரக்தியடைந்த அவர் தற்போது தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

இது குறித்து இம்ரான்கான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: 16 ஆயிரம் கோடி ஊழல் வழக்குகளில் உள்ள ஷபாஷ் ஷெரீப் பிரதமராக தேர்வு செய்திருப்பதை இந்த நாட்டிற்கு மிகப்பெரிய அவமானம். இது போன்று வேறு எதுவும் இருக்க முடியாது. எனவே எங்கள் பிடிஐ கட்சி எம்.பி.க்கள் ராஜினாமா செய்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பதவியில் இருந்து அவரை எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின்படி வெளியேற்றினர். இதனால் தனது பிரதமர் பதவி பறிபோனதால் எப்படி நாடாளுமன்றத்திற்கு சென்று அமர்ந்து வருவது எண்ணிய இம்ரான்கான் தன்னுடைய எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளது தற்போது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy: NDTV

Tags:    

Similar News