குருத்வாராவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - அச்சத்தில் வாழும் ஆப்கானிஸ்தான் சீக்கியர்கள்!
ஆப்கானிஸ்தான் காபூல் நகரத்தில் உலக புகழ்பெற்ற கார்டே பர்வான் குருத்வாராவில் இன்று காலை பொதுமக்கள் அதிகமாக கூடியிருந்த நிலையில் திடீரென்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான், காபுல் நகரில் உலக புகழ்பெற்ற கார்டே பர்வான் குருத்வாரா உள்ளது. அங்கு ஏராளமான மக்கள் சென்று வழிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல பொதுமக்கள் குருத்வாராவில் கூடியிருந்த சமயத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தனர். இதில் பலர் படுகாயமடைந்தனர். பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஆர்பி சிங் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: காபூலில் உள்ள கார்டே பர்வான் குருத்வாராவில் ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக குருத்வாராவின் தலைவர் குர்னாம் சிங் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Source: One India Tamil
Image Courtesy: Swarajya