ஹம்பியில் உள்ள கோயில்களை மீட்டெடுக்கும் பணி: ஸ்ரீ ராமர் ஆசிபெற நடைபெற்ற பூஜை.!
ஹம்பியில் சேதமடைந்த பல்வேறு கோரிக்கைகளை மீட்டெடுக்கும் பணிக்கான பூஜை நடைபெற்றுள்ளது.
கர்நாடகாவில் அமைந்துள்ள விஜயநகர அறக்கட்டளை பல்வேறு கோவில்களில் மீட்டெடுக்கும் பணிகளை தற்போது துவங்கியுள்ளது. கர்நாடகாவில் உள்ள ஹம்பி நகரம் என்றாலே பலருக்கும் கட்டிடக்கலைகள் தான் ஞாபகம் வரும். குறிப்பாக அங்கு உள்ள கோயில்கள் கட்டிடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. ஹம்பி அல்லது விஜயநகரம் என்று இது அழைக்கப்படுகிறது. எனவே விஜய நகரை சுற்றி இருக்கும் பல்வேறு கோவில்கள் குறிப்பாக சேதமடைந்து இருக்கும் கோயில்களை மீட்கும் பணிக்காக அங்குள்ள அறக்கட்டளை தற்பொழுது முன்வந்துள்ளது.
அந்த வகையில் விஜயநகர உஜ்ஜீவன அறக்கட்டளை ஹம்பியில் உள்ள கோயில்களை மீட்டெடுக்கும் வகையில் பல்வேறு சுவாமிகளின் ஆசிர்வாத பூஜையுடன் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஹம்பியின் ஸ்ரீ வித்யாரண்ய சுவாமிகள், சோசலேவின் ஸ்ரீ வியாசராஜ சுவாமிகள் மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீ டாடாச்சாரியார் ஆகியோரின் ஆசியுடன் இந்த பூஜை நடைபெற்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
எப்பொழுதும் கோவில்களை மீட்கும் பணிக்காக, கடவுளின் ஆசிர்வாதத்துடன் குறிப்பாக சிறு பூஜைகளில் தொடங்குவதுதான் வழக்கம். அந்த வகையில் ஹம்பியில் சிதிலமடைந்த கோயில்களின் திருப்பணிக்கான சடங்கு நடவடிக்கைகளைத் தொடங்க ஸ்ரீ ராமர் அவர்களின் ஆசீர்வாதத்தை வேண்டி பூஜை செய்யப்பட்டது. இது தொடர்பான அடுத்த பதிவையும் விஜயநகர உஜ்ஜீவன அறக்கட்டளை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Based onTwitter post