பஞ்சாப் மிஷனரிகளின் மூளைச் சலவை செயல்கள்: பாதிக்கப்பட்ட இந்து மக்கள் தகவல்!
பஞ்சாப்பில் இருக்கும் கிறிஸ்தவ மிஷனரிகள் மூளை சலவை செயல்களால் இந்து மக்கள் பெருமளவில் பாதிக்கப் படுகிறார்கள்.
இந்திய அரசாங்கம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தங்களது மதத்தை தேர்ந்தெடுப்பதற்காக முழு சுதந்திரத்தை அளித்துள்ளது. ஆனால் அதை பலர் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். வலுக்கட்டாயமாக துன்புறுத்துதல் அல்லது பலவற்றை இலவசமாக தருவதாக கூறி மக்களை மதம் மாற்றுவது தடுக்கப்பட்ட ஒன்றாக 'கட்டாய மதமாற்ற தடை சட்ட' மசோதா அறியப்படுகிறது. அந்த வகையில் தற்போது பஞ்சாபில் இருக்கும் மிஷனரிகள் தங்களுடைய மூளைசலவை செயல்கள் காரணமாக பல இந்து மக்களை கிறிஸ்துவ மதத்திற்கு அலைகிறார்கள் என்ற செய்தியை நியூஸ் 18 வெளியிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பல்வேறு இந்து மக்கள் தங்களுடைய பல்வேறு கதைகளையும் தற்போழுது வெளிக் கொண்டு வந்துள்ளார்கள்.
சுமார் 7 வயதான ஹிமானீஷ் பகத், பிறப்பிலிருந்தே பார்வையற்றவர். மிட்டாய் வியாபாரம் செய்யும் அவரது தந்தை, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை அளித்தும் ஹிமானீஷுக்கு பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, ஜலந்தரில் உள்ள ஒரு மிஷனரியைப் பார்க்கச் சென்றால், சிறுவனுக்குப் பார்வை திரும்பக் கிடைக்கும் என்று ஒரு சில உள்ளூர் கிறிஸ்தவர்களால் குடும்பத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. குழந்தையின் பெற்றோர் இந்த திட்டத்தை இன்னும் ஏற்கவில்லை. மிஷனரிகளுக்கு வருகை தந்த பலர் பல ஆண்டுகளாகத் தங்களுடைய தீராத நோய்களிலிருந்து விடுபட முடிந்தது என்றும் கூறப்பட்டது. நான் கிறிஸ்தவனாக மாறினால் என் குழந்தை பார்க்க முடியும் என்று அவர்கள் என்னிடம் உறுதியளித்தனர். ஆனால் நான் இன்னும் நிபந்தனையை ஏற்கவில்லை. காரணம் அவர்கள் மதமாற்றத்திற்கு உள்ளாவார்கள் என்ற ஒரு விஷயம் தான்.
மேலும் பெரும்பாலான ஏழை மக்களை மிஷனரிகள் குறிவைத்த அவர்களுக்குத் தேவையான விஷயங்களை தருவதாகக் கூறி அவர்களைப் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் இதைப் பற்றி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "பஞ்சாபில் 30% மக்கள் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் மிகவும் பலவீனமான நிதி பின்னணியைச் சேர்ந்தவர்கள். அப்படி அவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டால், அவர்கள் வெளிநாட்டுப் பயணங்களால் மட்டும் பல வெற்றி பெற முற்படுவார்கள். ஆனால் அதற்கு முன்பு அவர்கள் மதமாற்றத்திற்கு உள்ளாக வேண்டும்" என்று அவர் கூறினார்.
Input & Image courtesy: News 18