இரண்டாம் உலகப் போரில் மூழ்கிய ஜெர்மனி போர்க் கப்பல் கண்டுபிடிப்பு - எங்கு தெரியுமா?

இரண்டாம் உலகப் போரில் மூழ்கிய ஜெர்மனியின் போர்க்கப்பல் தற்போது செர்பியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-20 11:22 GMT

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியாவில் கடும் வரட்சி காரணமாக ஆற்றின் நீர் மட்டம் குறைந்து கொண்டு வருகிறது. இதனால் இங்கு இரண்டாம் உலகப்போர் காரணமாக மூழ்கிய ஜெர்மனியை சேர்ந்த போர்க்கப்பல் ஒன்று வெளியே வர தொடங்கியுள்ளது. இதனால் இந்த பகுதி தற்போது பரபரப்பாக காணப் படுகின்றது அந்த காலத்து போர்க்கப்பல்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள். 


1944ஆம் ஆண்டு ஜெர்மனியின் நாசிப் படையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போர்க்கப்பல் சோவியத் படைகளுக்கு எதிராக தங்களுடைய தாக்குதல்களை கைவிட்டு பின்வாங்க தொடங்கிய போதுதான் பகுதி அருகே ஆற்றில் இந்த போர்க்கப்பல் மூழ்கியிருக்கலாம் என்று அங்குள்ளவர்கள் கூறப்படுகிறது. மேலும் இது ஹிட்லருடன் போரிடுவதற்கு சோவியத் ரசியா பயன்படுத்திய போர்க் கப்பல் ஆகவும் அறியப்படுகிறது. 


இந்த போர்க்கப்பல் பயன்படுத்தாமல் இருந்த ஏராளமான வெடிகுண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் ஆற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே போர்க் கப்பல்களில் பல்வேறு வகையான வெடிமருந்துகளும் இதுபோன்று வெளிவருவதால் இந்த பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாத்து வருகிறார்கள். மேலும் இந்தக் கப்பல்களின் மீதம் உள்ள பொருட்கள் பொருட்காட்சியில் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது. 

Input & Image courtesy: Polimer

Tags:    

Similar News