பணம் கடனாக கேட்டால் கூட ஓடி ஒளிந்து கொள்ளும் உலகத்தில் இப்படியும் ஒரு உன்னத மனிதரா?- வலைதள வைரல்!
தனக்கு லாட்டரியில் விழுந்த ஒரு கோடி ரூபாய் பரிசை தன் சகோதரருக்கும் சமமாக பகிர்ந்து கொடுத்து அசத்தியிருக்கிறார் ஒருவர்.
தனக்கு விழுந்த லாட்டரி பரிசில் சரிபாதியை சகோதரருக்கு பகிர்ந்து கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ஒரு அமெரிக்கன் .விர்ஜீனியாவைச் சேர்ந்த டிம் கான்வெல் ஐந்து டாலர் தொகை கொடுத்து லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். அப்போது தனது பிறந்த நாள் மற்றும் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் எண்கள் கொண்ட லாட்டரி தேர்வு செய்து வாங்கினாராம் .இந்த அதிர்ஷ்ட எண்கள் அவருக்கு நிஜத்தில் மிகப்பெரிய பரிசு அள்ளிக் கொண்டு வந்து சேர்த்துவிட்டது.
அவருக்கு இரண்டு லட்சத்து 30 ஆயிரத்து ஒரு அமெரிக்க டாலர் பரிசாக விழுந்தது. இதன் இந்திய மதிப்பு ரூபாய் ஒரு கோடியே 91 லட்சம் ஆகும். இதனால் இந்த அதிர்ச்சியில் விழுந்தவர் தூங்கிக் கொண்டிருந்த தனது சகோதரர் ஸ்டீவ் கான்வெல்லை எழுப்பி தங்களுக்கு அதிர்ஷ்டம் அளித்துள்ளதாக கூறினார். தனது பரிசில் சரிபாதியை தனது தம்பிக்கு பிரித்துக் கொடுப்பதாக கூறினார் .
அது குறித்து அவர் கூறும் போது 'எங்களுக்குள் நீண்ட நாட்களாக ஒரு ஒப்பந்தம் இருந்தது. யார் வாங்கும் லாட்டரி லாவது பரிசு விழுந்தாலும் அதை சரிபாதியாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதே ஒப்பந்தம். அதன்படி எனக்கு விழுந்த பரிசை தம்பியுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றார். அமெரிக்காவில் அண்ணன் தம்பி பாசம் மற்றும் குடும்ப பாசம் குறைவு என்றும் 'காசு பணம் வந்தால் நேசம் சில மாசம்' என்று இங்கே பாடல் வரியும் உண்டு. ஆனால் தம்பிக்கு தனது பரிசை பகிர்ந்து அளித்து இங்கு நல்லவங்க பலரும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை விதைத்து விட்டார் டிம் கான்வெல்.
SOURCE :DAILY THANTHI