பயமுறுத்தும் பட்டாசு விலைகள் - பின்னணி என்ன?

பண்டிகை காலங்களில் பயன்படுத்தப்படும் பட்டாசுகளின் விலை உயர்வு 40 சதவீதம் அதிகரிப்பு.

Update: 2022-10-04 05:14 GMT

பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் மெடிக்கல் குளோரைடு அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக தற்போது 40 சதவீதம் பட்டாசு விலை உயர்ந்துள்ளது. பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கெமிக்கல் விலை ரூபாய் 50 முதல் 150 வரை விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக பொட்டாசியம் கிலோ 60க்கு விற்பனையானது. தற்போது 140 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது. பேக்கிங் செய்யப்படும் ஆடுகள் கிலோ 42க்கு விற்பனையானது.


பயன்படுத்தப்படும் பேரியம் நைட்ரேட்டு தடை செய்யப் பட்டுள்ளது. இதன் காரணமாக சிவப்பு கலர் பயன்படுத்த வேண்டி உள்ளது. சிவப்பு கலரில் விலை தற்போது மூன்று மடங்காக விலை உயர்ந்துள்ளது. மேலும் பச்சை அரிப்புக்கு தடை காரணமாக விலை உயர்வு உயர்வதால் பட்டாசு விலை தற்போது 40 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. பட்டாசு விலையை நிர்ணயிக்க முடியாமல் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் திணறுகிறார்கள். எனவே மூலப் பொருட்கள் மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


விருதுநகர் மாவட்டம் வேம்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ள சரவெடி ஆலைகள் அதிகமாக உள்ளன. பேரியம் நைட்ரேட்டு தடை காரணமாக தற்போது அங்கு சரவெடிகள் கம்பி மத்தாப்பு தயாரிக்கப்படுவது இல்லை. இது பொது மக்களுக்கு சரிவர தெரியாததால் வாடிக்கையாளர்கள் கம்பி மத்தாப்பு சரவெடிகளில் 100 வாலா, ஆயிரம் வாலா, பத்தாயிரம் வாலா விதிகளை அதிக அளவில் கேட்டு வருகிறார்கள். இளைஞர்கள் இடையில் கவரக்கூடிய சரி சரவெடிகள் விற்பனைக்கு வராததால் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

Input & Image courtesy: News Live

Tags:    

Similar News