இந்தியா எகிப்துக்கு இடையே புதிய ஒப்பந்தம்.. மத்திய அமைச்சகம் அனுமதி..

இந்தியா- எகிப்து இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Update: 2023-05-18 01:15 GMT

இந்தியா தன்னுடைய சுமுகமான வெளிநாட்டு உறவுகள் மூலமாக தொடர்ந்து பல்வேறு ஒப்பந்தங்களை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவின் போட்டி ஆணையத்திற்கும், எகிப்திய போட்டி ஆணையத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று இந்தியப் போட்டி ஆணையம் (சி.சி.ஐ) மற்றும் எகிப்திய போட்டி ஆணையம் (இ.சி.ஏ) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவு ஒப்புதல் அளித்தது.  


இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) மற்றும் எகிப்தியப் போட்டி ஆணையத்திற்கு (இசிஏ) இடையேயான தொடர்பை மேம்படுத்துவதையும், அனுபவப் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மூலம் ஒருவருக்கொருவர் தங்களது அனுபவங்களைக் கற்றுக்கொள்வதையும், பின்பற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியப் போட்டி ஆணையம் எகிப்து போட்டி ஆணையத்திடமிருந்து கற்றுக்கொள்ள உதவுகிறது. இது நுகர்வோருக்கு பெருமளவில் பயனளிக்கும். போட்டிச் சட்டம் 2002, பிரிவு 18 ஆனது, இந்தியப் போட்டி ஆணையம் தனது கடமைகளை நிறைவேற்றும் நோக்கத்திற்காக, எந்தவொரு வெளிநாட்டுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள அனுமதிக்கிறது. அதன்படி, இந்தியா – எகிப்து இடையே மேற்கூறிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News