இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: மாற்றுத்திறனாளிகள் துறையில் ஏற்படும் புதிய மாற்றம்!

மாற்றுத்திறனாளித் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

Update: 2023-02-17 03:17 GMT

இந்தியாவுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே மாற்றுத்திறனாளித் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மாற்றுத்திறனாளித் துறையில் ஒத்துழைப்புக்கான கூட்டு முயற்சியை மேற்கொள்ள இந்தியா, தென்னாப்பிரிக்கா அரசுகளுக்கு . இடையே இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும். இது இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்தும்.


இருநாடுகளும் பரஸ்பரம் ஒப்புக் கொண்டதற்கு இணங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கால வரம்புக்குள் செயல்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நவீன அறிவியல் ரீதியிலான நீண்டகாலம் நிலைத்து வரக்கூடிய செலவு குறைந்த உபகரணங்களை இரு நாடுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க முடியும்.


மாற்றுத்திறனாளிகளுக்கு நல்ல ஒரு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடைபெற இருக்கும் இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இவற்றுக்கு வழி சேர்க்கும் விதமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Input & Image courtesy: News

Tags:    

Similar News