சீனாவை பின்னுக்கு தள்ளும் இந்தியா, இரண்டு மடங்கு அபார வளர்ச்சி - எதில் தெரியுமா?

Update: 2022-07-27 10:57 GMT

ஸ்மார்ட்போன் உட்பட பல்வேறு மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் சீனா மட்டுமே முன்னிலையில இருந்தது. ஆனால் தற்போது சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா குறிப்பிட்ட துறைகளில் அபாரமான வளர்ச்சி அடைந்து வருகிறது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்தியா மொபைல் போன் உற்பத்தியில் 2022ம் நிதியாண்டில் இரண்டு மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போதைய நிலையில் சர்வதேச அளவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடந்த 2022ம் நிதியாண்டில் மட்டும் இந்தியாவின் மொபைல் போன் உற்பத்தி மதிப்பானது 5277 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 2021ம் நிதியாண்டில் வெறும் 2334 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. இதுவே 2020ம் ஆண்டில் 2485 கோடியக இருந்தது. அதன்படி பார்த்தால் மத்திய அரசின் பி.எல்.ஐ., திட்டத்தினை அடுத்து இந்த அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே இந்த பி.எல்.ஐ., திட்டத்தின் மூலமாக இந்தியாவில் தற்போது மிக, மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் செல்போன் உற்பத்தியும் ஒன்றாகும். இதனால் உலகளவில் இரண்டாவது பெரிய செல்போன் உற்பத்தியாளராக இந்தியா உருவாகியுள்ளது என ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: One India Tamil

Tags:    

Similar News