எந்த நேரத்திலும் சீனா தாக்கலாம் - எல்லையில் குவிக்கப்பட்ட 12 ஆயிரம் இராணுவ வீரர்கள் : விரையும் மிக் 29 போர் விமானங்கள்!

எந்த நேரத்திலும் சீனா தாக்கலாம் - எல்லையில் குவிக்கப்பட்ட 12 ஆயிரம் இராணுவ வீரர்கள் : விரையும் மிக் 29 போர் விமானங்கள்!

Update: 2020-06-27 06:16 GMT

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் நாரவனே கிழக்கு லடாக்கின் செயல்பாட்டு நிலைமை குறித்து உயர்மட்ட அரசியல் தலைமைக்கு அளித்த விளக்கத்தில், இந்திய இராணுவத்தின் "மொத்த போர் திறன்" சீனாவிலிருந்து வரும் எந்தவொரு தாக்குதல்களையும், பெரிய தவறான செயலையும் தடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கு நிலவரத்தையும் இருநாடுகளின் உயர் அதிகாரிகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையையும் கண்காணிக்க அப்பகுதிக்கு பயணித்த ராணுவத் தளபதி எம்.எம். நரவனே பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்கை டெல்லியில் சந்தித்தார். அப்போது இந்தியப் படைகளின் தயார்நிலை வியூகத்தைக் குறித்து நரவனே விளக்கம் அளித்த்தார்.

இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள், அதிநவீன பீரங்கிகள் போன்றவற்றுடன் 12 ஆயிரம் வீரர்கள் லடாக் எல்லையில் தயார் நிலையில் இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.

சுகோய் விமானங்கள், மிக் 29 போர் விமானங்கள் எல்லையில் வட்டமிட்டு வருகின்றன. சீனா மறுபடியும் தாக்குதல் தொடுக்கலாம் என்று உளவுத்துறை தகவல்களால் இந்திய வீரர்கள் பதிலடி கொடுக்கத் தயார் நிலையில் உள்ளனர்.

சீனப் படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Similar News