ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பெருமிதம்!
ட்ரோன் தொழில்நுட்பத்தில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்திய திகழ்கிறது என்று மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார்.
ட்ரோன் தொழில்நுட்ப தொழில்நுட்பத்தில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னனியாக திகழ்கிறது என்று மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் இளைஞர் நல விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராகூர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். சென்னை அருகே அக்னி தொழில்நுட்பக் கல்லூரியில் கருடா ஸ்பேஸ் ஆய்வுக்கூடம் மற்றும் பயிற்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். அவர் பேசும் பொழுது ட்ரோன் தொழில்நுட்பம் பிரபல பிரதமரின் தொலைநோக்கு பார்வையில் உருவானது.
அனைத்து துறைகளிலும் இந்த தொழில்நுட்பம் மாற்றாக உருவெடுத்து வருகிறது வேளாண்மையில் இதன் பயன்பாடு மிக அதிக அளவில் தற்போது உருவாக்கி வருகிறது. வேளாண் துறையில் பூச்சி மருந்து தெளித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு ட்ரோன் பயன்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு உயர்த்தி இதன் மூலம் பிரதமர் மோடியின் கடமை நிறைவேற்றலாம்.
வேளாண் துறைக்கு மட்டுமின்றி பாதுகாப்பு, சுற்றுலா, பொழுது போக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சாதாரண மக்களின் வாழ்க்கையிலும் இது முக்கிய இடம் கிடைத்துள்ளது. ட்ரோன் பைலெட்டுகளின் வேலைவாய்ப்பு மூலம் நல்ல ஊதியம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் இவர்களது பணி மூலம் வேளாண் துறையில் ஆண்டிற்கு 24 ஆயிரம் கோடி அளவிற்கு நான்கு மடங்கு சேமிக்க முடியும். எதிர்காலத்தில் 2023 ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் பைலட்டுகளை தயார் படுத்த வேண்டும் என்று இலக்கை இந்தியா நிர்ணயித்து இருக்கிறது என்று கூறுகிறார்.
Input & Image courtesy: News