தீவிரவாதத்தை இந்தியா நசுக்குகிறது - பிரதமர் மோடி!

மும்பை தாக்குதலை நினைவுகூர்ந்த வந்த பிரதமர் மோடி இந்திய தீவிரவாதத்தை நசுக்கி வருவதாக தெரிவித்தார்.

Update: 2023-11-27 05:00 GMT

கடந்த 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் கடல் வழியாக மும்பையில் ஊடுருவி 60 மணி நேரம் நடத்திய தாக்குதலில் 18 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர்.பலர் படுகாயம் அடைந்தனர். இதன் நினைவு தினம் குறித்த பிரதமர் மோடி நேற்றைய தனது மன் கி பாத் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியில் பேசியதாவது:-


நவம்பர் 26 ஆம் தேதியை நாம் ஒருபோதும் மறக்க முடியாது . இந்த நாளில்தான் நாட்டில் மிக கொடூரமான தீவிரவாத தாக்குதல் நடந்தது. தீவிரவாதிகள் மும்பையையும் ஒட்டு மொத்த நாட்டையும் உலுக்கினர்.ஆனால் அந்த தாக்குதலில் இருந்து நாம் மீண்டு இருப்பது தான் இந்தியாவின் திறன் நாம் மீண்டதுடன் மட்டுமல்லாமல் தீவிரவாதத்தை முழு துணிச்சலுடன் நசுக்கி வருகிறோம். 1950ல் ஏற்றுக் கொல்லப்பட்டதில் இருந்து 16 முறை அரசியலமைப்பு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.


காலங்கள் சூழ்நிலைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு அரசுகள் வெவ்வேறு காலங்களில் அரசியல் அமைப்பின் திருத்தங்களை செய்துள்ளன.தற்போது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப மகளிர் இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மிகவும் திருப்தி அளிக்கிறது. நீர் பாதுகாப்பு பிரச்சனை 21 ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய சவால்களில் ஒன்று.


நீரை சேமிப்பது உயிரை காப்பாற்றுவதை விட குறைவானது அல்ல. தற்போது நாட்டில் பணத்தை ரொக்கமாக பயன்படுத்தும் போக்கு குறைந்து வருகிறது. டிஜிட்டல் புரட்சியின் வெற்றி இதை சாத்தியமாக்கி உள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்கு அனைவரும் யுபிஐ அல்லது மற்ற டிஜிட்டல் தளங்கள் மூலம் மட்டுமே பணப்பரிவர்த்தனை செய்யுங்கள். அதன் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றார்.


SOURCE :Dinakaran.

Similar News