அமெரிக்காவில் ஜப்பான் பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு!

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு வாஷிங்கடனில் இன்று (செப்டம்பர் 24) நடைபெற உள்ளது.

Update: 2021-09-24 03:07 GMT

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு வாஷிங்கடனில் இன்று (செப்டம்பர் 24) நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பங்குபெறுவதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்த அழைப்பினை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனிடையே அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து பேசினார்.

மேலும், ஜப்பான் பிரதமர் யோஷிஹைடே சுஹாவையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்துடன் பதிவு செய்துள்ளார். மேலும், இந்தோ- பசிபிக் பிராந்திய வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து இரண்டு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source, Image Courtesy: Pm Modi Twiter

Tags:    

Similar News