போஸ்ட் ஆபீஸில் இனி இந்த வசதியை பெறலாம்.. அப்டேட் ஆகும் புதிய தொழில்நுட்பம்..
தபால் நிலையங்களில் விளம்பரம் காட்சிப்படுத்தும் வசதி அறிமுகம்.
அஞ்சல் துறை அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அஞ்சல் அட்டைகள், உள்நாட்டுக் கடித அட்டைகள், சேமிப்புப் புத்தகம் போன்றவற்றின் மூலமும், வெள்ளைப் பலகைகள், பதாகைகள், ஸ்டாண்டீகள், சியோஸ்க்கள், விதானம் மற்றும் குடை போன்றவற்றின் மூலமும் விளம்பரம் செய்வதற்கான ஊடகமாக உதவுகிறது. மேலும் குறிப்பிட்ட தபால் நிலையங்களில் வைக்கப்பட்டள்ள எல்.இ.டி டி.விகளில் விளம்பரம் காட்சிப்படுத்தும் வசதியும் உள்ளது.
கோவிட்-19 தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்தல், தண்ணீரைச் சேமித்தல், ஸ்வச் பாரத் மிஷன், பெண் குழந்தைகளைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு முயற்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கண்ட விளம்பர சேனல்கள் அரசு நிறுவனத்தால் பயன்படுத்தப்படுகின்றன. அஞ்சல் துறையால் வழங்கப்படும் மேற்கண்ட ஊடக அஞ்சல் சேவைகளைப் பெற, அருகிலுள்ள தபால் நிலையங்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது இந்த tnbdcell@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
எனவே தபால் நிலையத்தில் தற்பொழுது விளம்பரப்படுத்தும் சேவை அறிமுக படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு நபர்கள் தங்களுடைய விளம்பர பதிவு மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கங்களுக்காக இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News