மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா சார்பில் இதுவரை ரூ.22 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி வழங்கியுள்ளது. அதன்படி கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பல்வேறு வகையில் உதவி வருகிறது. உணவு பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள் என ஏராளமான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டின் போது 11 ஆயிரம் டன் உணவுப்பொருளை இந்தியா சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுவரையில் ரூ.7,500 கோடிக்கு அத்தியாவசிய பொருள், ரூ.7,000 கோடிக்கு எரிபொருள் மற்றும் நாணயமாற்று உதவியும், ரூ.7,500 கோடிக்கு ஆசிய யூனியன் கூட்டமைப்பு சார்பாக இந்தியா உதவி உள்ளது என்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தகவலை கூறியுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தியா அளித்த உதவியால்தான் தற்போது அங்கு வசிக்கின்ற மக்களுக்கு போதுமான அத்தியாவசிய பொருட்கள் கிடைத்து வருகிறது. மற்ற உலக நாடுகளை காட்டிலும் இந்தியா ஏராளமான உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Malaimalar