அமெரிக்காவிடம் ட்ரோன்களை வாங்குகிறது இந்தியா - சீன எல்லையில் பயன்படுத்த முடிவு!

அமெரிக்காவிடம் ட்ரோன்களை வாங்குகிறது இந்தியா அதை சீன எல்லையில் பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.

Update: 2023-02-04 03:25 GMT

இந்திய எல்லைப் பகுதிகளில் சீனர்கள் அதிகமாக ஊடுருவ முயற்சி செய்து வருகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே சீன எல்லைகளில் இந்தியாவின் ட்ரோன் நிலைநிறுத்தப்படுவதன் மூலமாக எல்லை கண்காணிப்பு பணியில் புதிய ஒரு அதிகாரத்தை ஏற்படுத்த முடியும் என்று இந்திய ராணுவம் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது. இதற்காக 24,600 கோடி செலவில் அமெரிக்காவிடமிருந்து ராணுவ உளவு ட்ரோன் வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா தற்போது கையெழுத்து விட்டு இருக்கிறது. அவற்றை சீன எல்லைகளிலும் இந்தியா பெருங்கடல் பகுதிகளிலும் பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.


குறிப்பாக தற்பொழுது புழக்கத்தில் உள்ள ட்ரோன் அதிக வசதிகள் நிறைந்ததாக காணப்படுகிறது. அதில் எம் கியூ 9P டோன்கள் மற்றும் தூண்களை விட அதிக தொலைவு பறக்கும் அதிக நேரம் பறக்கும் என்று குறிப்பிட்டு இருக்கிறது. குறிப்பிட்டு உளவு பணிக்கு தேவையான பொருட்களை அவை சுமந்து செல்ல பயன்படுத்தப்படும். அதில் உள்ள ரேடார் இரவு பகல் பாராது இந்த நேரத்திலும் மிகச் சிறப்பாக துல்லியமாக செயல்படும். 360° கோணத்திலும் வீடியோக்களை துல்லியமாக கச்சிதமாக எடுக்கும் உதவும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறது. அணைக்கவும் சுங்கத்துறை பணிகளுக்கு பயன்படுத்தவும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவும் வகையில் இவை அமையக்கூடும் மொத்தத்தில் பல்வகை பயன்பாடுகளுக்கு உதவக்கூடிய ஒரு ஒட்டு மொத்த ட்ரோன் ஆக இது பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.


இந்த ட்ரோன்களை இந்திய சீன இடையிலான எல்லைக்கோட்டில் இந்திய பெருங்கடல் பகுதிகளில் உளவு பணிகளுக்கு பயன்படுத்த இந்தியா திட்டமிட்டு இருக்கிறது. எனவே இத்தகைய சிறப்பு வாய்ந்த ட்ரோன்களை முப்படைகளுக்கு வாங்க இந்திய திட்டமிட்டு இருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. மூன்று பில்லியன் டாலர் செலவில் 30 டோன்களை வாங்கத் திட்டமிட்டு இருக்கிறது. இவை இராணுவம் விமானப்படை கடற்படை ஆகியவற்றிற்கு தலா பத்து என்ற விகிதம் அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News