இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான நல்லுறவை பற்றி மனம் திறந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி !

PM Opens about Relationship Between russia and India.

Update: 2021-09-04 10:30 GMT


ரஷ்யாவின் விளாடிவாஸ்டாகில் நடந்த கிழக்கு பொருளாதார மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வழியாக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ரஷ்யாவுடனான வர்த்தக உறவை பற்றி அவர் பேசியதாவது,

விளாடிவாஸ்டாக் –சென்னை இடையே பல எரிசக்தி திட்டங்கள் நடைபெறுகிறது. இந்த திட்டங்கள் மூலம் இந்தியா ரஷ்யா இடையேயான வர்த்தக உறவு மேம்பட்டுள்ளது. மேலும் அதிக எரிசக்தி திட்டங்களில் இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து செயல்பட்டால் சர்வதேச சந்தையில் வலுவான அடித்தளத்தை அமைக்க முடியும். கடல் சார் தொழில்வழிதட போக்குவரத்து பணிகள் நடத்து வருகிறது இதன் மூலம் இந்தியா ரஷ்யா இடையிலான வர்தக உறவில் புதிய மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

ரஷ்யாவின் வளர்ச்சிக்கு உதவ இந்தியர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த 2019 ம் ஆண்டு ரஷ்ய பயணத்தின் போது அதிபர் புதினுடன் பயணம் செய்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

Source: தினமலர்

Tags:    

Similar News