இந்தியா-அமெரிக்கா உறவு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய முக்கிய தகவல்

Update: 2022-04-24 02:50 GMT

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: இந்தியா, அமெரிக்கா இடையிலான இரண்டு தரப்பு உறவுகள் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதனை யாரும் கேள்வி எழுப்ப முடியாது. இரண்டு நாட்டு உறவுகள் மிகவும் ஆழமடைந்துள்ளது.

தற்போது அமெரிக்கா மற்றம் இந்தியாவுடனான உறவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா எப்போதும் அமெரிக்காவுடன் நட்புறவை விரும்புகிறது. அதே நேரத்தில் ரஷ்யாவின் உறவு என்பது பாதுகாப்பு உபகரணங்களுக்கான பாரம்பரிய சார்பு மட்டுமின்றி, ரஷ்யாவுடன் எங்களுக்கு ஒரு நேர்மையான புரிதல் இருக்கிறது. இதன் காரணமாகவே ரஷ்யாவை இந்தியா ஆதரவு அளிக்கிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News