உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா விளங்குகிறது - ஜெர்மனி அமைச்சர் நம்பிக்கை!
உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா விளங்குகிறது என்று ஜெர்மனி அமைச்சர் கூறி இருக்கிறார்.
ஜெர்மனி G7 நாடுகள் குழுவின் தலைமை பொறுப்பேற்று பின் இந்தியாவிற்கு வருகை தருவது தருவதாக அந்நாட்டி வெளியுறுத்துறை அமைச்சர் அன்னா லேனா பெர்பாக் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஜெர்மனி வருகிறவு துறை அமைச்சர் கூறுகையில், ஜெர்மனி ஜி7 நாடுகளின் குழுவின் தலைமை பொறுப்பு வகிக்கும் கடைசி மாதங்களில் தான் இந்தியாவிற்கு வருகை தருகிறது என்று தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக ஜி-20 தலைவர் பதவியை இந்தியா ஏற்ற பிறகு சில நாட்களில் இந்த பயணம் அமையுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியப் பயணத்தின் பொழுது தற்போதைய சூழலில் அவசர கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களான காலநிலை நெருக்கடி மற்றும் விதிமுறைகள் அடிப்படையில் சர்வதேச ஒழுங்கை பராமரித்தல் ஆகியவற்றை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும் என்று இருதரப்பின் இடையே கூறப்பட்டிருந்தது. வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும் உறுதியான ஜனநாயகமாகவும் உள்ள இந்தியா அனைத்து உள் சமூக சவால்கள் இருந்த பொழுதிலும் உலகின் பல நாடுகளுக்கு முன்மாதிரியாகவும் உள்ளது.
குறிப்பாக உக்ரைன் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு பிறகு G-20 தலைமை இடம்பெற்று இருக்கிறது. இறுதியில் இந்தியாவிற்கு நன்றி இந்தியா- ஜெர்மனி கூட்டணி நாடாக உள்ளது என்று அவர் தெரிவித்து இருக்கிறார். ஒரு நாடு எப்படி முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை இந்தியா உலகிற்கு உணர்த்தி இருக்கிறது. போர்களை தவிர்த்து அமைதி மூலம் தீர்வு காண வேண்டும் என்பதையும் உணர்த்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். G20 மாநாட்டிற்கு பொறுப்பேற்கும் இந்தியாவிற்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவிற்கு பயணத்தின் பொழுது நிறைய விஷயங்கள் பேச இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
Input & Image courtesy: Dinamalar