எல்லை பயங்கரவாதத்தை ஒழிக்க கைகோர்ப்போம் - அமித்ஷா அழைப்பு!

எல்லை தாண்டி பயங்கரவாதத்தை ஒழிக்க அமித்ஷா உலக நாடுகளுக்கு அழைப்பு.

Update: 2022-10-23 03:21 GMT

சர்வதேச போலீஸ் ஆன இன்டர்போல் அமைப்பின் பொது சபை கூட்டம் டெல்லியில் நடந்தது. அதன் நிறைவு விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அவர் அங்கு பேசுகையில், பயங்கரவாதம் என்பது மிகப்பெரிய சமூக உரிமை மீறல், நல்ல பயங்கரவாதம், கெட்ட பயங்கரவாதம், பெரிய பயங்கரவாதம், சிறிய பயங்கரவாதம் என்பன போன்ற வகைப்படுத்துவது பயன் அளிக்காது. கிரிமினல் குற்றங்கள் கும்பல்கள் கூட்டமைப்பு அனைத்து ஒத்துழைப்புடன் செயல்படுகின்றன அதுபோல் இன்டர் போலும் உலக அமைப்புகளுடன் ஒன்றாக செயல்பட வேண்டும்.


தற்போது குற்ற சம்பவங்கள் எல்லை கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பாடு இல்லாமல் நடக்கின்றது. இந்த சவால்களை சமளிக்க உறுப்பு நாடுகளை தயாரிக்க வேண்டும் இன்டர்போலி பங்கு மிகவும் முக்கியமானது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் அச்சுறுத்தல் ஆக உள்ளது.


அதை ஒழிக்க இன்டர்போல் உறுப்பு நாடுகள் கோர்த்து செயல்பட வேண்டும். ஆன்லைன் மூலம் நடக்கும் மூளை சலவைகளை அரசியல் பிரச்சினைகளாக கருத முடியாத அப்படி கருதுவது அதற்கு எதிரான போரை அரைகுறையாகிவிடும். அனைத்து வகையான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் போலீஸ் படையை மோடி அரசு நவீன ஆக்கி வருகிறது. பயங்கரவாதம் போதை பொருள் கடத்தல் தொடர்பான தேசிய தகவல் தொகுப்பை உருவாக்கி வருகிறோம். அந்த தகவல் போலீஸ் சாருக்கு உபயோகமாக இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News