இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !
கொரோனா தொற்று பிரச்சனையை மீறி, கடந்த நிதியாண்டில் மட்டும் இந்தியாவுக்கு 6 லட்சத்து 15 ஆயிரம் கோடி அன்னிய நேரடி முதலீடு கிடைத்தது. இதன் மூலம் முதலீட்டுக்கு உகந்த நாடு என்ற அந்தஸ்தை தக்க வைத்துள்ளது.
அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கு நடைபெற்ற உலக வங்கியின் வளர்ச்சி குழு கூட்டத்தில் கலந்து கொண்டடு பேசியதாவது:
கொரோனா தொற்று பிரச்சனையை மீறி, கடந்த நிதியாண்டில் மட்டும் இந்தியாவுக்கு 6 லட்சத்து 15 ஆயிரம் கோடி அன்னிய நேரடி முதலீடு கிடைத்தது. இதன் மூலம் முதலீட்டுக்கு உகந்த நாடு என்ற அந்தஸ்தை தக்க வைத்துள்ளது.
மேலும், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் தலா 1 லட்சம் கோடிக்கு மேல் கிடைத்தது. இவை இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டும் வருவதற்கு சாட்சியாகும். வருங்காலங்களில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
Source: Daily Thanthi
Image Courtsy:Ministry of Finance