கீவ் நகரத்தை விட்டு இந்தியர்கள் உடனடியாக வெளியேறுங்கள்: எச்சரிக்கை செய்த இந்திய தூதரகம்!
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் இருந்து தப்பிக்க இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டினர் பதுங்கு குழிகளில் தங்கியுள்ளனர். அது போன்று உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் உள்ளவர்கள் உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் நேட்டோவில் இணைய இருப்பதாக கூறி ரஷ்ய அதிபர் புடின் போர் தொடுக்க அதிரடியான உத்தரவை பிறப்பித்தார். இதனால் நாளா புறமும் சூழ்ந்த ரஷ்ய படைகள் உக்ரைன் மீது பயங்கரமான முறையில் குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் பலர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தப்பி சென்ற வண்ணம் உள்ளனர். அதே போன்று இந்தியர்களையும் மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கீவ் நகர் அருகாமையில் ரஷ்ய ராணுவம் குவிந்துள்ளனர். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கீவ் நகரத்தை தாக்கக்கூடும் என்று இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் படித்து வந்த மாணவர்கள் மற்றும் பிற வேலைகளுக்காக சென்ற இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கார், மற்றும் ரயில்கள் பிற வாகனங்கள் கிடைத்தாலும் கீவ் நகரத்தை விட்டு வெளியேறுங்கள் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi