உக்ரைனில் உக்கிரமாகும் போர்: இந்தியத் தூதரகம் எங்கு மாற்றப்பட்டுள்ளது?

Update: 2022-03-13 12:40 GMT
உக்ரைனில் உக்கிரமாகும் போர்: இந்தியத் தூதரகம் எங்கு மாற்றப்பட்டுள்ளது?

உக்ரைனில் போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அங்கு இருந்த இந்தியத் தூதரகம் தற்போது போலந்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 18 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. முக்கியமாக தலைநகர் கீவ் மற்றும் கார்கீவ் நோக்கி ரஷ்ய படைகள் தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. விரைவில் தலைநகரை நோக்கி ரஷ்ய படைகள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தற்காப்பு நடவடிக்கையாக கீவ் நகரத்தில் இருந்து இந்தியத் தூதரகம் அண்டை நாடான போலந்துக்கு தற்காலிகமாக இடம் மாற்றப்பட்டுள்ளது. 

Source: Puthiyathalaimurai

Image Courtesy: News 18

Tags:    

Similar News