உலகிலேயே மிக உயரமான இடத்தில் சாலை அமைத்து இந்தியா சாதனை !
கிழக்கு லடாக்கின் உம்லிங்லா பாஸ் என்ற இடத்தில் 19,300 அடி உயரத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 52 கிலோ மீட்டர் ஆகும். இதன் மூலம் உலகளவில் மிக உயரமான சாலையை கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா தற்போது பெற்றுள்ளது.
பொலியாவில் 18,953 அடி உயரத்தில் உதுருஞ்சு என்ற எரிமலைக்கு செல்லும் சாலையே இதுவரை உலகின் உயரமான சாலை என்ற பெருமையை பெற்றிருந்தது. இந்த சாதனையை தற்போது இந்தியா முறியடித்துள்ளது.
கிழக்கு லடாக்கின் உம்லிங்லா பாஸ் என்ற இடத்தில் 19,300 அடி உயரத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 52 கிலோ மீட்டர் ஆகும். இதன் மூலம் உலகளவில் மிக உயரமான சாலையை கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா தற்போது பெற்றுள்ளது.
இந்த சாலையால் உம்லிங்லா பேருந்து சாலை லடாக்கின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்காற்றும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
Source: Dinamalar
Image Courtesy: Dinamalar
https://www.dinamalar.com/news_detail.asp?id=2816912