அதிநவீன மின்னணு பொருள் தயாரிப்பில் இந்தியாவின் வலுவான முன்னேற்றம்- ஆப்பிள் வளர்ச்சிக்கு உரமிடும் இந்தியா!
அதி நவீன மின்னணு பொருட்கள் தயாரிப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது.;
அதை நவீன மின்னணு பொருள்கள் தயாரிப்பில் இந்தியாவின் வலுவான முன்னேற்றம் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த பத்தாண்டு கால வளர்ச்சிக்கு உரமிடும் என வல்லுநர்கள் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து விரிவான செய்தியாவது :-
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டு மட்டும் 42 சதவீத அளவுக்கு உயர்ந்து 870 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் வருவாய் ஈட்டியதாக வெளிநாட்டு பங்கு பரிவர்த்தனை நிறுவனம் ஸ்டான்லி தெரிவித்தது. 2023 ஐ ஃபோன்கள் ஏற்றுமதி 39 சதவீதம் அதிகரித்து 92 லட்சம் யூனிட்கள் ஏற்றுமதி ஆகின .
தொழில் கொள்கை சாதகமாக இருப்பதன் பயனாளியாக ஆப்பிள் உள்ளதாகவும் ஏற்றுமதி 40% உயர்ந்ததாகவும் கடந்த ஆண்டுகளில் சீனா ஆப்பிளின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்தது போல இந்தியாவும் உதவும் என தொழில்துறை ஆராய்ச்சி வல்லுனர் பிரபு ராம் ஐ.ஏ.என்.எஸ் க்கு தெரிவித்துள்ளார். 2022-ல் இந்திய சந்தையில் ஆப்பிளின் பங்கு 28 சதவீதமாக அதிகரித்தது. இது முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது அதிகமாகும் .இந்தியர்களின் பிரீமியம் மாடல் போன்களின் மீதான விருப்பம் அதிகரிப்பதும் இதற்கு ஒரு காரணம் இந்தியாவில் ரூ1. லட்சம் கோடி மதிப்பிலான ஐபோன்கள் முழுமையாக்கம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
SOURCE :kaalaimani.com