வலிமையான இந்தியாவை உருவாக்கும் பாதை - ஃபிட் இந்தியா திட்டம்!
பொதுமக்களின் உடற்தகுதி குறித்து உதவிடும் வகையில் இந்தியாவின் சிறந்த ஊட்டச்சத்து நிபுணர்களின் கலந்துரையாடல் நிகழ்வு;
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைக் கருத்தில் கொண்டு வலிமையான இந்தியாவை உருவாக்கும் பாதையில் "ஃபிட் இந்தியா" கலந்துரையாடல் நிகழ்வு முக்கிய பங்காற்றும். ஏனெனில் மக்கள் தங்களை முழு உடல் தகுதியுடையவர்களாக உருவாக்கி கொள்ளவும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவும், மனதளவில் வலிமையாக இருப்பதற்கும் வழிவகுக்கும் வகையில் திட்டம்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமான ‘ஃபிட் இந்தியா இயக்கத்தின் செயல்பாடுகளில் ஒன்றாக, புத்தாண்டில் பொதுமக்களின் உடற்தகுதி குறித்த திட்டமிடலுக்கு உதவிடும் வகையில் இந்தியாவின் சிறந்த ஊட்டச்சத்து நிபுணர்களின் கலந்துரையாடல் நிகழ்வு மற்றும் பல்வேறு நிகழச்சிகள் வரும் ஜனவரி 8-ம் தேதி முதல் ஃபிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 8 கலந்துரையாடல் நிகழ்ச்சியும் அடங்கும்.
இந்த கலந்துரையாடல் நிகழ்வில், புகழ்பெற்ற மல்யுத்த வீரர் சங்கரம் சிங் பேசும் போது, ‘ஃபிட் இந்தியா’ ஆரோக்கியமான நாடு என்ற மத்திய முன்முயற்சியின் நோக்கமே அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்பது தான். நான் இந்த நிகழ்வில் குறிப்பிடும் இயல்பான, எளிய நடைமுறைகளை அனைவரும் எளிதில் பின்பற்ற தங்களை வலிமையாக்கி கொள்ள முடியும் என்றார்.
Input & Image courtesy: News