நிலநடுக்கத்தால் குலுங்கியது இந்தோனேஷியா
இந்தோனேஷியாவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.பீதியில் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்தோனேசியா புவி தட்டுகள் சந்தித்து நகருகிற இடத்தில் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் 12 லட்சம் மக்கள் தொகையை கொண்ட மேற்கு பப்புவா மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. ரிக்டர் அளவுகோலில் இது 6.2 மற்றும் 5.5 புள்ளிகள் இடையே பதிவாகின.
மத்திய மாம்பெரரேமோ மாவட்டத்திற்கு 37 கிலோமீட்டர் வடமமேற்கில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. அதிர்ந்து போன மக்கள் அலரி அடித்துக்கொண்டு வீடுகளையும் பிற கட்டிடங்களையும் விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர்.
எனினும் இந்த நிலநடுக்கம் 16 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததால் பெருத்தசேதம் எதுவும் நிகழ்ந்ததாக உடனடி தகவல்கள் இல்லை. இது பற்றி நிலநடுக்கம் மற்றும் சுனாமி தணிப்பு பிரிவின் தலைவர் டார்லியானோ கூறுகையில் நிலநடுக்கங்கள் சுனாமியைத் தூண்டும் ஆபத்தை ஏற்படுத்தவில்லை. சேதத்தின் தாக்கம் குறித்தும் எந்த அறிக்கையும் இல்லை என தெரிவித்தார்.