ரமணா பட பாணியில் இறந்துவிட்ட குழந்தையை உயிருடன் இருப்பதாக கூறி ஏமாற்றிய எஸ்.ஆர்.எம் மருத்துவமனை : உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு #SRM

ரமணா பட பாணியில் இறந்துவிட்ட குழந்தையை உயிருடன் இருப்பதாக கூறி ஏமாற்றிய எஸ்.ஆர்.எம் மருத்துவமனை : உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு #SRM

Update: 2019-07-23 18:55 GMT

காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் டாக்டர்கள் அலட்சியத்தால் குழந்தை இறந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் என்று தினகரன் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.


கூடுவாஞ்சேரி காமாட்சி நகரை சேர்ந்தவர் டில்லிபாபு (27) ஐடி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவி ஜீவிதாவிற்கு, இரண்டு தினங்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள், அவரை உடனடியாக காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.


முதலில் குழந்தை இறந்துவிட்டதாக கூறிய மருத்துவமனை, உறவினர்கள் போராட்டம் செய்தவுடன் உயிருடன் இருப்பதாக கூறினர். பிறகு, மீண்டும் குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.


இதையும் படிக்க : சி.பி.சி.ஐ.டி-க்கு மாறிய எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தற்கொலைகள் : அவிழ்க்கப்படுமா மர்ம முடிச்சுகள்? #SRMSuicides


இது குறித்து உறவினர்கள் தினகரன் செய்திகளிடம் கூறுகையில், "இரண்டு தினங்களுக்கு முன்பு காலை 11 மணிக்கு பிரசவத்துக்காக மரத்துவமனையில் ஜீவிதாவை சேர்த்தோம். மாலை 5.30 மணிக்கு குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை இரவு பிறந்ததாக கூறினர். இதுவரை குழந்தையை கண்ணில் காட்டவில்லை. குழந்தை நன்றாக இருப்பதாக கூறிய டாக்டர்கள், தற்போது குழந்தை இறந்துவிட்டதாக கூறுகின்றனர்.


சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் யாரும் சரியான தகவல்களை தரவில்லை.முன்னுக்குப் பின் முரணாகவே கூறுகின்றனர். நன்றாக இருந்த குழந்தை திடீரென எப்படி இறந்தது. டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதில் மெத்தனமாகவே செயல்படுகின்றனர். ஞாயிற்றுக்கிழமையில் 5 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் மருத்துவமனையில் ஒரு டாக்டர் மட்டுமே இருந்தார். குழந்தை இறந்ததை ஏன் சொல்லவில்லை என கேட்டால், எங்களிடம் டீன் மன்னிப்பு கேட்கிறார். தெரியாமல் நடந்ததாக கூறுகிறார். அலட்சியமாக செயல்பட்ட டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று கூறியுள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற காவல்துறை, இந்த சம்பவத்தை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதையும் படிக்க : எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தற்கொலை செய்திகளை மறைக்க தான் #Pray_For_Nesamani ஹேஷ் டேகை ட்ரெண்ட் செய்கின்றனரா பத்திரிகையாளர்கள் ? : நெட்டிசன்கள் கேள்வி


இந்த நிலையில், எஸ்.ஆர்.எம் மருத்துவமனை, இயற்கை சுவாச கருவியை வைத்து ஏமாற்றியதாகவும், பெற்றோரிடம் பேரம் பேசியதாகவும் ட்விட்டர் வாசி ஒருவர் பதிவிட்டுள்ளார்.




https://twitter.com/dhanabjym/status/1153353652968407041?s=19

Similar News