ரூ.148 கோடி செலவிலான 4 திட்டங்கள்... மாறபோகும் சென்னை... மாஸ் காட்டும் மத்திய அரசு!

ரூ.148 கோடி செலவிலான 4 திட்டங்களை கப்பல் போக்குவரத்து, நீர்வழிப் பாதை அமைக்கும் திட்டம் உட்பட மத்திய அமைச்சர் தொடங்கிவைத்தார்.

Update: 2023-04-25 01:00 GMT

சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் ஆகியவற்றில் ரூ.148 கோடி செலவிலான 4 திட்டங்களை மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப் பாதைகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் நேற்று தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்திட்டங்கள் மூலம் சரக்குப் போக்குவரத்து மேம்பாடடையும் என்றார். சென்னை துறைமுகத்தில் ரூ.50 கோடி செலவில் பங்கர் பெர்த் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரு மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு சரக்குகள் கையாளும் திறன் அதிகரிக்கும். ஜோலார்பேட்டையில் ரூ 5 கோடி செலவில் சரக்குகள் சேகரித்து வைக்கும் கிடங்கு வசதி செய்யப்பட்டுள்ளது. சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை அமைச்சர் தெரிவித்தார்.


காமராஜர் துறைமுகத்திற்கு, வல்லூர் சந்திப்பிற்கும் என்சிடிபிஎஸ் சந்திப்பிற்கும் இடையே ரூ. 92 கோடி செலவில் சாலையை அகலப்படுத்தி கான்கிரீட் போடப்பட்டுள்ளது. இதனால் சரக்குப் போக்குவரத்தைக் கையாள்வது அதிகரிக்கும் என்று அவர் கூறினார். 2023 - 24ல் சென்னை மற்றும் காமராஜ் துறைமுகங்களின் சரக்குகள் கையாளும் திறனை 100 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மேலும் சென்னை துறைமுகத்தைக் கப்பல்கள் வந்து செல்வதற்கான குவிமையமாக மாற்றும் நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சரக்குப் போக்குவரத்துக்கான மதுரவாயல் உயர்மட்ட சாலைப் பணிகள் வரும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் என்று அவர் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News