இங்கிலாந்து பிரதமர் பதவி போட்டி - இந்திய வம்சாவளிக்கு கிடைக்கும் ஆதரவு!

இங்கிலாந்து பிரதமர் பதவியை போட்டியில் ரிஷி சுனக் 104 எம்பிக்கள் ஆதரவை திரட்டி இருக்கிறார்.

Update: 2022-10-23 23:39 GMT

இங்கிலாந்து நாட்டின் பொருளாதார நெருக்கடி பிரதமர் லிஸ்ட் பதவிக்கு வேட்டு வைத்துவிட்டது. அவர் தனது ராஜினாமாவை கடந்த 20ஆம் தேதி அதிரடியாக அறிவித்தது, அந்த நாட்டின் அரசியல் களத்தை பரபரப்பாக்கி விட்டால் இது அடுத்து ஆளும் கன்சர்வேட்டிக் கட்சியின் புதிய தலைவரை அதிவேகமாக பிரதமராக தேர்ந்தெடுக்கும் நடைமுறை தொடங்கி இருக்கிறது. ஆளும் கன்சர்வேட்டிக் கட்சியின் 357 எம்.பிக்கள் உள்ள நிலையில் 100 எம்.பிக்களின் ஆதரவை பெற்றால் மூன்று பேர் முதல் கட்ட போட்டியில் இருக்க முடியும்.


ஆனால் ஒருவர் 158 எம்பிக்கள் ஆதரவுகளை பெற்றால் இரண்டு பேர் மட்டுமே களத்தில் இருக்க முடியும். ஆனால் ஒரே ஒருவர் அதிக எண்ணிக்கையிலான ஆதரவுகளை பெற்றால் அவரை புதிய தலைவர் என்பது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு பேர் போட்டியிடுகின்ற நிலை வந்தால் இணைய வழி ஓட்டுப்பதிவு நடைபெறும். இதன் முடிவு 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை தெரியவரும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர்களிடத்தில் பெண் வேட்பாளராக பென்னி மார்ட்டின் களம் இறங்கி பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார்.


மேலும் முன்னாள் பிரதமர் ஜான்சனும் மற்றும் முன்னாள் நிதி மந்திரியான இந்திய வம்சா வழியைச் சேர்ந்த ரிஷி சுனக்கும் இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராமமூர்த்தியின் மருமகன் என்றும் அதிகாரப்பூர்வமாக முத்திரை குத்திவிட்டாலும் அவர் எம்.பிக்களின் ஆதரவுகளை பெறுவதில் தீவிரம் காட்டுகிறார். ரிஷி நேற்று 104 எம்பிக்களின் ஆதரவை பெற்று விட்டார். கடந்த முறை போட்டியில் இருந்து வெற்றி வாய்ப்பு இழந்த சுனக் சென்ற முறை விட்டதை இந்த முறை பிடிப்பார் என்று நம்பிக்கை நிலவுகிறது. தற்பொழுது 104 எம்.பி களின் ஆதரவுகளை அவர் பெற்றிருக்கிறார். பிரதமர் போட்டி பதவி போட்டியில் போட்டியிட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News