மின்சாரத்தை துண்டித்து பாமக பிரமுகரை வீடு புகுந்து தாக்கிய இன்ஸ்பெக்டர், கண்சிவந்த ராமதாஸ். ஆயுதப்படைக்கு தூக்கி அடித்த கள்ளக்குறிச்சி எஸ்.பி.!

மின்சாரத்தை துண்டித்து பாமக பிரமுகரை வீடு புகுந்து தாக்கிய இன்ஸ்பெக்டர், கண்சிவந்த ராமதாஸ். ஆயுதப்படைக்கு தூக்கி அடித்த கள்ளக்குறிச்சி எஸ்.பி.!

Update: 2020-04-12 04:18 GMT

சின்னசேலம் காவல்நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் சுதாகர் பாமக ஒன்றிய செயலாளரை வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் கள்ளக்குறிச்சி பாமகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுகா மூங்கில் பாடி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி, இவரது மகன் சக்திவேல். இவர் பாமக ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். வெள்ளிக்கிழமை 10ம் தேதி இரவு குடும்பத்துடன் வீட்டில் இருந்துள்ளார்.

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது இரவு 11 மணி அளவில் மூங்கில்பாடி கிராமத்தில் மின்சாரத்தை போலீசார் துண்டித்துள்ளனர். இதன் பின்னர் மப்டி உடையில் ( டீ சர்ட்) அணிந்து கொண்டு வீட்டுக்கு இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் அவருடன் மூன்று போலீசார் அத்துமீறி வீட்டில் இருந்த சக்திவேலை சட்டையைப் பிடித்து தரதரவென வெளியே இழுத்து வந்துள்ளனர்.

வீட்டின் வெளியே வைத்து கண்மூடித்தனமாக இன்ஸ்பெக்டர் தாக்கியுள்ளார். அப்போது சக்திவேல் வலியால் கதறி துடித்துள்ளார். இதனையடுத்து அவரை காப்பாற்றுவதற்கு சக்திவேல் அம்மா, அப்பா இன்ஸ்பெக்டரிடம் எனது மகனை விட்டு விடுங்கள் எதற்காக அடிக்கின்றீர்கள் என்று கதறியுள்ளனர்.

ஆனாலும் கேக்காமல் அவரது தாயாரை கீழே பிடித்து தள்ளியுள்ளனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதன் பின்னர் மற்ற போலீசார் வாகனத்தை வரவழைத்து சக்திவேலை ஏற்றி காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதனை சக்திவேல் நண்பர் வீடியோ எடுத்துள்ளார். இதன் பின்னர் பாமக நிர்வாகிகள் சின்னசேலம் காவல்நிலையத்துக்கு சென்று விசாரித்தபோது, இன்ஸ்பெக்டர் சுதாகர் குறித்து சக்திவேல் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில் பாமக போராட்டம் எப்படி இருக்கும் என இன்ஸ்பெக்டர் சுதாகர் கேட்கிறார். ஒன்றை செய்துள்ளார். பாமக போராட்டம் போக போக தெரியும் என பதிவிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த இன்ஸ்பெக்டர் பாமக நிர்வாகி சக்திவேலை தாக்கியதாக தெரிகிறது.

இந்த வீடியோவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பார்த்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி எஸ்.பி.யிடம் நடந்த சம்பவம் பற்றி கோபமாக கூறியுள்ளதாக பாமக நிர்வாகிகள் கூறினர். இதனையடுத்து சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆயுதப்படைக்கு கள்ளக்குறிச்சி எஸ்.பி., மாற்றியுள்ளார்.

இது தொடர்பாக பாமக சட்டபாதுகாப்பு குழு தலைவர் வக்கீல் பாலு பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆயுதப்படைக்கு மாற்றியது போதாது, அவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். மேலும், பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், மாநில மனித உரிமை ஆணையத்துக்கும் முறைப்படி பாமக சட்டபாதுகாப்பு குழுவால் முறைப்படி புகார் அளிக்கப்படும்.

அது மட்டுமின்றி தாக்குதலில் சக்திவேல் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தாயாரும் தாக்கப்பட்டுள்ளார்.

சக்திவேல் குடும்பத்துக்கு காவல்துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

Similar News