இந்தியர்களுக்கு மல்டிபிள் என்ட்ரி விசா - துபாய் அறிமுகம்!

துபாய் நாடு இந்தியர்களுக்கு பயன்தரும் வகையில் மல்டிபிள் என்ட்ரி விசாவை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2024-02-26 10:20 GMT

நம் நாட்டில் இருந்த துபாய் செல்லும் இந்தியர்கள் பயன்பெறும் வகையில் ஐந்து ஆண்டு காலத்துக்கான மல்டிபிள் என்ட்ரி விசாவை துபாய் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.துபாய் இந்தியர்கள் அங்கு அதிக அளவில் வசித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நம் நாட்டில் இருந்து ஆண்டு தோறும் 20 லட்சம் பேர் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 24 லட்சம் பேர் எமிரேட்ஸ் சென்றுள்ளனர். குறிப்பாக சுற்றுலா நகரமான துபாய்க்கு சர்வதேச பயனியரின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இந்நிலையில் இந்தியர்களின் வருகையை மேலும் அதிகரிக்கும் விதமாக ஐந்தாண்டு காலத்திற்கான மல்டிபிள் விசா முறையையை துபாய் நிர்வாகம் அறிமுகப்படுத்துகிறது .இந்த விசா குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்படுவது :-


ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும் மல்டிபிள் விசாவை துபாயில் ஜிடிஆர் எஸ்ஏ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த விசாவை விண்ணப்பித்த இரண்டு முதல் ஐந்து நாட்களில் பெற முடியும். இந்த விசா வாயிலாக துபாயில் 90 நாட்கள் தங்கலாம் .இதை அதிகபட்சமாக 150 நாட்கள் வரை நீடித்துக் கொள்ளலாம். ஓராண்டில் 180 நாட்களுக்கு மேல் இந்த விசாவை பயன்படுத்த முடியாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SOURCE :Kaalaimani.com

Similar News