உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு : ரூ.10 லட்சம் கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி!
உத்திரபிரதேச முதலீட்டாளர் மாநாட்டில் பெறப்பட்ட முதலீட்டு திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழாவில் ரூபாய் 10 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
உத்திரபிரதேசத்தில் சமீபத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அதில் பத்து லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதை அடுத்து அந்த திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று லக்னோவில் நடந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்டார். உத்தர பிரதேச மாநில கவர்னர் ஆனந்தி பென் பட்டேல், முதல் மந்திரி யோகி ஆதித்யனாத், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொழில் அதிபர்கள் ,சர்வதேச இந்திய கம்பெனிகளின், பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், ஆகியோரும் கலந்து கொண்டனர். ரூபாய் பத்து லட்சம் கோடி மதிப்புள்ள 14 ஆயிரம் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைத்தார். இவை உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க ,எரிசக்தி, உணவு பதப்படுத்துதல் ,வீட்டு வசதி, ரியல் எஸ்டேட், உணவகம், கேளிக்கை கல்வி ஆகிய துறைகள் தொடர்பான, திட்டங்கள் ஆகும் .நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :-
7 , 8 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் இத்தகைய முதலீட்டு சூழ்நிலையை யாரும் நினைத்து பார்த்திருக்க முடியாது. அப்போதெல்லாம் குற்றச் செயல்களும் கலவரங்களும், சர்வ சாதாரணமாக நடந்தன. உத்தர பிரதேசம் வளர்ச்சி அடையும் என்று யாராவது சொன்னால் ஒருவரும் நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால் பா.ஜனதா இரட்டை எஞ்சின் அரசு பதவியேற்றவுடன் குற்றச்செயல்கள் குறைந்தன. வர்த்தக கலாச்சாரம் விரிவடைந்தது. வர்த்தகம், வளர்ச்சி! நம்பிக்கை ஆகியவை வளர்ந்தன