நவராத்திரி திருவிழா: ஈஷாவில் கே.வீரமணி அவர்களின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சிகள்!

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஈஷாவில் தினமும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

Update: 2022-10-02 01:36 GMT

தேவியின் வெவ்வேறு ரூபங்களை வழிபடுவது நவராத்திரி. நவராத்திரி என்பது வெவ்வேறு தேவிகளைப் பற்றியது. அதில் சிலர் மென்மையாக, அற்புதமானவளாக இருக்கிறார்கள். ஒரு சில தேவிகள் ஆக்ரோஷமாக, பயங்கரமாக அல்லது அச்சமூட்டும் விதத்திலும் இருக்கிறார்கள். உங்கள் தலையை துண்டித்தெறியும் பெண்ணையும் வணங்கும் ஒரே கலாச்சாரம் இதுதான். இது ஏனென்றால், ஒருவரின் புத்திசாலித்தனம், மேதமை, அறிவாற்றல் மற்றும் பிற திறன்களை நல்லொழுக்கத்தின் பலிபீடத்தில் மட்டும் ஒப்படைக்க நாம் விரும்பவில்லை. சமுதாயத்தை அணுகுவதற்கு உங்களுக்கு நல்லொழுக்கம் வாய்ப்பளிக்கும்.


உங்களிடம் நல்லொழுக்கம் இல்லையென்றால் சமுதாயம் உங்களை நிராகரிக்கும், ஆனால் வாழ்க்கை உங்களை நிராகரிக்காது. இந்த உலகில் நீங்கள் ஒருவர் மட்டுமே இருக்கிறீர்கள் என்றால், எது நல்லது என்பதை உங்களிடம் அறிவுறுத்த இங்கே யாரும் இருக்கமாட்டார்கள். உங்களைச் சுற்றியுள்ள மக்களை மனதில் கொண்டே நீங்கள் நல்லமுறையில் நடந்து கொள்கிறீர்கள், ஆனால் உயிர் என்ற அடிப்படையில் பார்த்தால் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. பல்வேறு சிறப்புகளை பெற்ற நவராத்திரி திருவிழா பண்டிகையை முன்னிட்டு ஈஷாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.


நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஈஷாவில் தினமும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 4-ஆம் நாளான செப்டம்பர் 29 கலைமாமணி திரு. கே.வீரமணி அவர்கள் பக்தி பாடல்களை பாடி பரவசமூட்டினார். குறிப்பாக, புகழ்பெற்ற 'பள்ளிக்கட்டு சபரிமலைக்கு' பாடலை பாடிய போது கரகோஷங்களால் அரங்கம் அதிர்ந்தது. நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஈஷாவில் தினமும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 5-ஆம் நாளான செப்டம்பர் 30 திரு.ஹர்ஷிதா நிரஞ்சன் குழுவினர் 'யக்க்ஷ கானம்' என்ற தலைப்பில் கர்நாடக நாட்டுப்புற நாடகத்தை நடத்தினர்.

Tags:    

Similar News