ஈஷாவில் நவராத்திரி திருவிழா - பாரதி திருமுருகனின் வில்லுப்பாட்டு கச்சேரி!
நேற்றுடன் ஈஷாவில் நவராத்திரி திருவிழாவில் நிறைவு விழாவையொட்டி திருமதி பாரதி திருமுருகன் அவர்களின் வில்லுப்பாட்டு கச்சேரி.
கடந்த சில நாட்களாக, நவராத்திரி முதல் நாள் தொடங்கி, ஒவ்வொரு நாளும் வணங்க வேண்டிய தேவியர், மந்திரம், அதனால் கிடைக்கக் கூடிய பலன்கள் ஆகியவற்றைப் பார்த்து வருகிறோம். தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் பெண்களால், பெண்களுக்காக, பெண் தெய்வங்களை கொண்டாடும் பண்டிகைதான் நவராத்திரி.ஒன்பது இரவுகள் என்று பொருள்படும் நவராத்திரி, துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி வடிவங்களில் தெய்வீக வழிபாட்டை ஒவ்வொரு மூன்று நாட்களும் வழிபடுகிறார்கள்.
இருப்பினும், பத்தாவது நாள் மிக முக்கியமான நாளாகும். இது 'வெற்றியின் அடையாளமாகக் கொண்டாடப் படுகிறது.இதனை விஜயதாசமி என்று அழைக்கப்படுகிறது. விஜயதசமி தினத்தில், அம்பிகை வெற்றி வாகை சூடினாள். ஆணவம், சக்தியாலும்; வறுமை, செல்வத்தினாலும்; அறியாமை, ஞானத்தாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் அது. ஆகவே அன்றைய தினம் மிகவும் சிறப்புமிக்கது. அன்று புதிதாகத் தொடங்கும் எந்தக் கலையும் எளிதாக வசமாகும் என்பது நம்பிக்கை. நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளும் இதுவே. இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரி திருவிழாவில் பண்டிகையை ஈஷா அமைப்பு சிறப்பாக கொண்டாடி வருகின்றது.
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஈஷாவில் தினமும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 8-ஆம் நாளான நேற்று கலைமாமணி திருமதி. பாரதி திருமுருகன் மற்றும் அவருடைய குழுவினர் 'யாதுமாகி நின்றாய் பைரவி' என்ற தலைப்பில் அருமையான வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை வழங்கினர்.