அவங்களுக்குள்ளேயே அடிதடி..! 4 ஐஎஸ் பயங்கரவாதிகளை தட்டித்தூக்கிய தலிபான்கள்!
ISIS-K terrorists killed by Taliban in Kabul
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சோந்த 4 பேரைக் கைது செய்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனா். அவா்களிடமிருந்து ஆயுதங்களும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
காபூலின் பஷாய் பகுதியில் தலிபான்களின் சிறப்பு அதிரடிப் படையினா் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் அந்த 4 பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டனா்.
அமெரிக்கப் படையினா் வெளியேறியதால் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் பொறுப்பு தலிபான்களிடம் வந்துள்ளது. இந்த நிலையில், ஐஎஸ்கே பயங்கரவாதிகள் தொடா்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் தலிபான்கள் உள்பட பலா் உயிரிழந்து வருகின்றனா். இந்தச் சூழலில், ஐஎஸ்கே பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ளனா்.
அதன் ஒரு பகுதியாக, காபூலில் 4 பயங்கரவாதிகளைக் கைது செய்துள்ளதாக அவா்கள் தற்போது அறிவித்துள்ளனா். எனினும், இது தொடா்பான கூடுதல் விவரங்களை அவா்கள் தெரிவிக்கவில்லை. இந்த தகவலை தலிபான்களின் தலைமை செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித்உறுதி செய்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த இருபது ஆண்டுகளாக தலிபான்களுக்கு எதிராகப் போரிட்டு வந்த அமெரிக்கப் படையினா், அங்கிருந்து படிப்படியாக திரும்ப அழைக்கப்பட்டனா். அந்த நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்தபோது, ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வேகமாக முன்னேறிய தலிபான்கள், தலைநகா் காபூலை கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி கைப்பற்றிய பிறகு மொத்த அதிகாரமும் அவர்கள் கைக்கு வந்தது.