காபூல் வெடிகுண்டு தாக்குதல் ! பொறுப்பேற்ற ஐஎஸ்.ஐஎஸ் !
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று மாலை இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் பிரதானமான அபே கேட்டில் நிகழ்ந்த ஒரு குண்டுவெடிப்பில் ஏராளமான அப்பாவி மக்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் அமெரிக்க வீரர்கள் 13 பேரும் மற்றவர்கள் 60 பேர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும், பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காபூல் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் காரோஷன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் மோதல் நிலவி வருகிறது குறிப்பிடத்தக்கது.
Source: Maalaimalar
Image Courtesy: CNN
https://www.maalaimalar.com/news/topnews/2021/08/27052009/2952987/Tamil-News-ISISK-claimed-responsibility-for-the-deadly.vpf