இஸ்ரேலில் அதிசயம்.. 1000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை கழிவுநீர் தொட்டியில் கண்டெடுப்பு.!

இஸ்ரேல், மத்திய பகுதியில் அமைந்துள்ளது யவ்னே என்ற நகரம். அங்கு அகழ்வாய்வின் போது கழிவுநீர் தொட்டியில் இருந்து கோழி முட்டையை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

Update: 2021-06-12 06:17 GMT

இஸ்ரேல், மத்திய பகுதியில் அமைந்துள்ளது யவ்னே என்ற நகரம். அங்கு அகழ்வாய்வின் போது கழிவுநீர் தொட்டியில் இருந்து கோழி முட்டையை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளை கடந்தும் இந்த கோழி முட்டை உடையாமல் இருப்பது அந்நாட்டு அகழ்வாராய்ச்சியாளர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது உலகத்தில் மிகவும் அரிதான கண்டுபிடிப்பு என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகையில், உலகளவில் கோழி முட்டை உடனடியாக உடையக்கூடியது. ஆனால் இஸ்ரேலில் கண்டுப்பிடிக்கப்பட்ட முட்டை உடையாமல் இருப்பது எங்களுக்கு ஆச்சரித்தை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளனர்.

Tags:    

Similar News