இஸ்ரேல்-ஹமாஸ்போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு அவசியம் - பிரதமர் மோடி வலியுறுத்தல்!

இஸ்ரேல்- ஹமாஸ் போரால் புதிய சவால்கள் உருவெடுத்துள்ளன. அதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2023-11-18 13:36 GMT

இந்தியா, பாகிஸ்தான் , சீனா உள்ளிட்ட நாடுகள் தெற்குலக நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவின் ஏற்பாட்டில் 'தெற்குலக நாடுகளின் குரல்' என்ற உச்சி மாநாட்டின் முதல் பகுதி கடந்த ஜனவரி மாதம் நடந்தது. இந்நிலையில் இந்தியாவின் ஏற்பாட்டில் அந்த உச்சி மாநாட்டில் இரண்டாவது பகுதி நேற்று காணொளி காட்சி மூலம் நடந்தது. மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-


மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் ஹமாஸ் போரால் புதிய சவால்கள் உருவெடுத்துள்ளதை பார்த்து வருகிறோம். கடந்த அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் இந்த போரால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு இந்தியா வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது .


சமீபத்தில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாசுடன் பேசிய பிறகு பாலஸ்தீன மக்களுக்கு மனிதநேய உதவிகளை அனுப்பி வைத்தோம். இந்த நேரத்தில் உலக நன்மைக்காக தெற்குலக நாடுகள் ஒரே குரலில் பேச வேண்டும். இஸ்ரேல் ஹமாஸ் போரால் எழுந்துள்ள சூழ்நிலையை சுய கட்டுப்பாடுடன் அணுகி பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண வேண்டும். ஆலோசனை தகவல் தொடர்பு ஒத்துழைப்பு உருவாக்கம் திறன் கட்டமைப்பு ஆகிய ஐந்து அம்சங்களின் அடிப்படையில் நம்மிடையே ஒத்துழைப்பு நிலவ வேண்டும். ஜி 20 நாடுகள் அமைப்பில் இந்தியாவின் முயற்சியால் ஆப்பிரிக்கா யூனியன் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்ட வரலாற்று நிகழ்வை என்னால் மறக்க முடியாது. மேலும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தெற்குலக நாடுகளுக்கு நிதியும் தொழில்நுட்பமும் அளிப்பதற்கு ஜி20 மாநாட்டில் கருத்தொற்றுமை ஏற்பட்டது.


டெல்லி பிரகடனத்தில் தற்கொலை பிரச்சனைகளுக்கு ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டது. தெற்குலக நாடுகளுக்கும் வடக்குலக நாடுகளுக்கும் இடையிலான தூரத்தை புதிய தொழில்நுட்பம் அதிகரித்து விடக்கூடாது என்றும் செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் அந்த தொழில்நுட்பத்தை பொறுப்பான முறையில் பயன்படுத்த வேண்டும். இக்கருத்தை முன்னெடுப்பதற்காக இந்தியாவில் அடுத்த மாதம் செயற்கை நுண்ணறிவு சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார


SOURCE :DAILY THANTHI

Similar News