இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டம்: தமிழக பழங்குடி மாணவர்கள் தேர்வு!
இஸ்ரோ விண்வெளி கல்வித் திட்டத்தில் நீலகிரி ஐந்து பழங்குடி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) வசிக்கும் பயிற்சி திட்டத்திற்கு நாடு முழுவதும் இருந்து சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். அதில் 150 பேர் தேர்வு செய்யப்பட்டதாக விண்வெளி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மே 16 முதல் மே 28 வரை இஸ்ரோவால் 'யுவ விக்யானி கார்யக்ரம்' (YUVIKA) நடத்தப்பட்டது. நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 150 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், பெங்களூரு UR ராவ் செயற்கைக்கோள் மையம், அகமதாபாத், நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர், ஹைதராபாத் மற்றும் வடகிழக்கு விண்வெளிப் பயன்பாடுகள் உட்பட இஸ்ரோவின் ஐந்து மையங்களில் யுவ விக்யானி காரியக்ரம்' (YUVIKA) பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இஸ்ரோ விண்வெளி கல்வித்திட்டம் என்பது இந்தியாவின் இஸ்ரேல் சார்பாக வருடா வருடம் நடத்தப்படும் ஒரு தேர்வு ஆகும். இதன் மூலமாக தேர்வு செய்யப்படும் மாணவர்கள் இஸ்ரோ கல்வி திட்டத்தில் இடம் பெறுவார்கள். அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
இந்த ஒரு கல்வித் திட்டத்தில் தான் தற்போது நீலகிரியில் உள்ள ஐந்து பழங்குடி மாணவர்கள் தேர்வாகியுள்ளார்கள். செங்கரை ஊராட்சி தலைவர் தலைமையில் ஸ்டெர்லைட் ஸ்டெர்லைட் ஃபவுண்டேஷன் அமைப்பினர் ஆகியோரில், செங்கரையில் இரண்டு மாணவர்கள், கருகையூரில் இரண்டு மாணவர்கள், மெட்டுக்கல்லை சேர்ந்த ஒரு மாணவர் என மொத்தமாக ஐந்து மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது தேர்வாகியுள்ளார்கள்.
Input & Image courtesy: Dinakaran News