இந்தியா- இலங்கை இடையேயான நெருக்கமான கலாச்சார மையம்: பிரதமர் முயற்சியால் சாத்தியமானது!

யாழ்ப்பாணம் கலாச்சார மையம், இந்தியா- இலங்கை இடையேயான நெருக்கமான கலாச்சார ஒத்துழைப்பிற்கான முனைப்பான நடவடிக்கை.

Update: 2023-02-13 01:19 GMT

யாழ்ப்பாணம் கலாச்சார மையம் திறக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சி, அதிபர் ரணில் விக்கிரமசிங்கே முன்னிலையில் நடைபெற்றிருப்பது மிக முக்கியமான நடவடிக்கையாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தக் கலாச்சார மையத்திற்கு 2015ம் ஆண்டு தாம் அடிக்கல் நாட்டியதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். திறப்பு விழா நிகழ்ச்சி சார்ந்த புகைப்படங்களையும் தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் கூறுகையில், "யாழ்ப்பாணம் கலாச்சார மையம், இந்தியா – இலங்கை இடையேயான நெருங்கிய கலாச்சார ஒத்துழைப்பிற்கான முக்கியமான முனைப்பான நடவடிக்கையாகும். இதன்மூலம் பல்வேறு மக்கள் பயனடைவர். அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றதன் மூலம் இந்த நிகழ்ச்சியை மிகவும் சிறப்பானதாக மாற்றியுள்ளார்.


கடந்த 2015ம் ஆண்டு யாழ்பாணத்திற்கு சிறப்புப் பயணம் மேற்கொண்டதை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். அங்கு யாழ்ப்பாணம் கலாச்சார மையத்திற்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என பிரதமர் கூறி இருக்கிறார். அந்தப் பயணத்தில் இருந்து சில காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News