ஓய்வூதியத் திட்டத்தில் அரசின் பங்களிப்பு 14 சதவீதமாக உயர்வு, ஓய்வின்போது 60 சதவீதத் தொகைக்கு வரி கிடையாது - அருண் ஜெட்லி

ஓய்வூதியத் திட்டத்தில் அரசின் பங்களிப்பு 14 சதவீதமாக உயர்வு, ஓய்வின்போது 60 சதவீதத் தொகைக்கு வரி கிடையாது - அருண் ஜெட்லி

Update: 2018-12-11 01:58 GMT
என்.பி.எஸ். எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் ஊதியத்தில் தலா 10 சதவீதம் மத்திய அரசு மற்றும் அரசு ஊழியரின் பங்களிப்பாக இருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் பங்களிப்பை 14 சதவீதமாக உயர்த்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். 
எனினும் ஊழியரின் பங்களிப்பு 10 சதவீதமாகவே தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஓய்வு பெறும்போது வழங்கப்படும் 60 சதவீதத் தொகைக்கு வரி கிடையாது என்றும் அருண் ஜெட்லி கூறினார். இந்த அறிவிப்பு இலட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News