#JusticeForLavanya கட்டாய மதமாற்ற கொடுமை.. மாணவியின் வீடியோ பதற வைக்கிறது: அண்ணாமலை கண்டனம்!

Update: 2022-01-20 11:51 GMT

திருக்காட்டுப்பள்ளியில் இயங்கிவரும் புனித இருதய மேல்நிலை பள்ளியில் படித்த லாவண்யா என்ற 12ஆம் வகுப்பு மாணவியை பள்ளி நிர்வாகம் மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் விஷம் அருந்தி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இது தொடர்பாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், "ஏழை விவசாயி மகள் லாவண்யா வயது 27, அரியலூர் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் நன்றாகப் படிக்கும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி.

இவரை மதம் மாறச் சொல்லி, பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பள்ளியின் ஹாஸ்டலில் தங்கி இருந்த மாணவி, மரணத்திற்கு முன், பேசிய வீடியோ பதிவு, மனதைப் பதறவைக்கும்.

நடுநிலையான விசாரணை நடைபெற்று, தவறு செய்தவர், கைது செய்யப்பட வேண்டும். உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி உதவியும், அரசு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும். 

மதமாற்றம் - தமிழகத்திலே வேகமாக பரவுகின்ற ஒரு விஷச்செடி. ஏழை மக்களை துன்புறுத்தி இது போன்ற காரியங்கள் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு மாநில அரசு கவனம் கொடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்", என்று பதிவிட்டு தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

Tags:    

Similar News