கோவையில் கலை கட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி - சாலையில் திரண்ட பொதுமக்கள்!

கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற 'ரோடுஷோ' நிகழ்ச்சியில் சாலையின் இருபுறமும் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மோடியை வரவேற்றனர்.

Update: 2024-03-19 11:52 GMT

கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் சாலையின் இருபெரும்பும் திரண்ட பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மோடியை வரவேற்றனர். பொய்க்கால் குதிரை வேடமிட்டும், வீணை இசைத்தும் பிரதமர் மோடியை இசை கலைஞர்கள் வரவேற்றனர்.

கர்நாடக மாநிலம் சிவமமெக்கா விமான நிலையத்தில் இருந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு நேற்று மாலை கோவைக்கு பிரதமர் மோடி வந்தார். சாய்பாபா காலனியில் இருந்து துவங்கிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று மக்களை நோக்கி கையயசைத்தபடி காரில் சென்றார். மோடியுடன் திறந்தவெளி வாகனத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றினார்.

பிரதமர் மோடியை வரவேற்க சாலையின் இரு புறமும் தடுப்புகள் அமைத்து பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர் .சாலையின் இரு புறமும் கூடிய தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதமர் மோடியை மலர் தூவி வரவேற்றனர். இந்த ரோடு ஷோ நிகழ்ச்சி வடகோவை டி.பி ரோடு வழியாக ஆர்.எஸ்.புறம் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் வரை 2.5 கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்றது.

போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் 5000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இரவு ரேஸ் கோர்ஸில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்று பிரதமர் மோடி ஓய்வெடுத்தார். இன்று கோவையிலிருந்து விமான மூலம் பாலக்காட்டிற்கு செல்கிறார்.


SOURCE :Dinaseithi

Similar News