கனக துர்கா கோவிலின் 10 கிலோ தங்கம் SBI வங்கியில் டெபாசிட்!
கனக துர்கா கோவிலில் 10 கிலோ தங்கத்தை SBI வங்கியில் டெபாசிட் செய்துள்ளது.
ஆந்திர தேசத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் பயன்படுத்தப்படாத தங்கத்தை அந்தந்த மாநிலத்தில் உள்ள வங்கிகளில் அரசின் வழிகாட்டுதலின்படி டெபாசிட் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி பல்வேறு கோவில்களில் அதிகமாக உள்ள குறிப்பாக பயன்படுத்தாத தங்க நகைகளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் முதலீடு செய்து பல்வேறு பயன்களை பெற்று வருகிறது. மேலும் இந்த தங்க திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் கோவிலுக்கு வருமானம் கிடைத்து அதில் பக்தர்களுக்கு சேவை செய்வதாகவும் கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி பயன்படுத்தப்படாத பொருட்கள் தங்கப் பத்திர திட்டத்தில் சேர்க்கப் படுகின்றன. ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர ஸ்வாமிவர்லா தேவஸ்தானம், கனக துர்கா தேவிக்கு பக்தர்கள் வழங்கிய தங்கத்தை பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) டெபாசிட் செய்துள்ளது.vவியாழன் அன்று தங்கம் காணிக்கை மதிப்பீட்டிற்குப் பிறகு, கோயில் அதிகாரிகள் தங்கப் பத்திரத் திட்டத்தில் 10.453 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்தனர். அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி டெபாசிட் செய்யப்பட்டது.
பயன்படுத்தப் படாமல் இருந்த தங்கப் பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் தங்கப் பத்திரத் திட்டத்தில் டெபாசிட் செய்வதற்கு முன்பு நகை சரிபார்ப்பு அதிகாரி துர்கா பவானியால் மதிப்பீடு செய்யப்பட்டது. கோயில் EO டி.பிரமராம்பா, அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் எம்.வி.சுரேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Input & Image courtesy: The Hindu